Video | ஒரு துப்பாக்கி கூட சுடவில்லை...! பொதுமக்கள் முன்னிலையில் போலீசாருக்கு நேர்ந்த அவமானம்

”ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராக 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை பணியாற்றியுள்ளார்”

Video | ஒரு துப்பாக்கி கூட சுடவில்லை...! பொதுமக்கள் முன்னிலையில் போலீசாருக்கு நேர்ந்த அவமானம்
வீடியோ காட்சிகள்
  • News18
  • Last Updated: August 22, 2019, 11:47 AM IST
  • Share this:
பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தும் விதமாக போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட முயற்சித்தனர். ஆனால், அவர்கள் அவமானப்பட்டதுதான் மிச்சம்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

மிஸ்ராவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான சுபால் மாவட்டத்தில் உள்ள பாலுவா பஸார் பகுதியில் நடந்தது. பின்னர் அங்கு அவர் தகனம் செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் என்பதால் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.


தகனம் செய்யப்படும் போது போலீசார் வானத்தை நோக்கி 22 முறை (மூன்று ரவுண்டுகளாக) சுடுவது வழக்கம். நேற்றும் அதேபோல போலீசார் துப்பாக்கியை தூக்கி விசையை அழுத்தியுள்ளனர். ஆனால், ஒரு துப்பாக்கியும் வெடிக்கவில்லை. பல முறை முயற்சித்தும் துப்பாக்கியில் இருந்து சப்தம் கூட வரவில்லை.



இதனால், அங்கு கூடியிருந்தவர்கள் சலசலக்க போலீசாருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இந்த விவகாரம் முதல்வரின் காதுகளுக்கு எட்டிய நிலையில், இது தொடர்பாக அவர் போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையங்களில் உள்ள துப்பாக்கிகளின் நிலை குறித்து போலீஸ் டி.ஜி.பி அறிக்கை கேட்டுள்ளார்.

ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராக 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மிஸ்ரா, பின்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 2013-ம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்