பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்துகொண்ட குற்றத்திற்காக பீகாரைச் சேர்ந்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முன்கேர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தபவ் ரவி சௌராசியா. இவர் தற்போது அம்மாநிலத்தின் கதாரா என்ற பகுதியில் பதிவுத்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கு முன்னதாக ரவி சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையமான ODFஇல் கிளார்க்காக வேலை செய்துவந்துள்ளார்.
இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலை ஆகும். இங்கு ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படும் நிலையில், ரவி இங்கு பணிபுரிந்த போது அவருக்கு பேஸ்புக் மூலம் ஷான்வி சர்மா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுடனான நட்பு நாளடைவில் நெருங்கிய பழக்கமான நிலையில், அவர் ரவியை தனது காதல் வலையில் ஹனி ட்ராப் பாணியில் வீழ்த்தியுள்ளார். அந்த பெண் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஏஜென்ட் எனவும், போலி அடையாளத்தில் தன்னுடன் பழகி வருகிறார் என்பதும் ரவிக்கு பின்னால் தெரியவந்துள்ளது.
இருப்பினும், பணத்திற்கு ஆசைப்பட்டு தான் வேலை பார்த்த இடத்தின் ரகசிய தகவல்களை அந்த பெண்ணிடம் ரவி அரசு விதிமுறைகளை மீறி பகிர்ந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அங்கிருந்து இடம் மாறுதல் பெற்ற ரவி பீகார் பதிவுத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் இமெயில் மூலம் ரகசிய தகவல் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் - லட்சக்கணக்கில் மோசடி செய்து சிக்கிய வெளிநாட்டு கும்பல்
இந்த சதிச்செயலை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்து ரவியை கைது செய்துள்ளனர். மேலும், ரவியின் செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ரவி மீது அலுவலக ரகசிய சட்டத்தின் (Official Secrets Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சதிச்செயலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் ரவியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.