Home /News /national /

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா – தேசிய அரசியலில் பரபரப்பு

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக-வுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பீகார் முதல்வர் பொறுப்பில் இருந்து நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்துள்ளார். நிதிஷ் குமார் ராஜினாமா செய்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    பீகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் பாஜக மேலிடத்திற்கும் அண்மைக்காலமாக மோதல் ஏற்பட்டு வந்தது.

    பாஜக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களையும் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வந்தார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் மத்திய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்

    இதனால், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அவர் வெளியேற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், சோனியா காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியானது.

    இதைத் தொடர்ந்து, நிதிஷ் குமார், தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது அலைபேசிகளை வெளியே வைத்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    இந்நிலையில் பீகார் கவர்னர் பாகு சவுகானிடம் நிதிஷ் குமார் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இந்த விவகாரம் தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக-வுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதாதளத்துக்கு 45, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர். இதேபோல, ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு 79, காங்கிரஸுக்கு 19 மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Bihar, BJP, Nitish Kumar

    அடுத்த செய்தி