ஹோம் /நியூஸ் /இந்தியா /

பீகாரில் கட்டுமான பாலம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்

பீகாரில் கட்டுமான பாலம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்

பாலம் இடிந்து விபத்து

பாலம் இடிந்து விபத்து

நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்ததுபோது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பீகாரில் கட்டுமானம் செய்து கொண்டிருந்த பாலம் இடி விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பீகாரின் நாலந்தா பகுதியில் உள்ள பெனா காவல் நிலையப் பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேனா காவல் நிலையம் மற்றும் பாகன் பிகா காவல்துறையினர் நிலைமையை ஆய்வு செய்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கிறார்கள் என அஞ்சப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பேசிய அதிகாரி ஒருவர், சம்பவம் நடந்தபோது நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது என்றும் இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை என்றும் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

  இதையும் படிங்க: கட்டாய மத மாற்ற தடை சட்டத்தில் 507 பேர் கைது - உ.பி அரசு தகவல்

  கடந்த மாதம் குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் உள்ள தொங்கு பாலம் மாலை இடிந்து விழுந்ததில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Bihar