நீட் தேர்வுக்காக பீகாரிலிருந்து கொல்கத்தாவுக்கு 700 கி.மீ பயணித்த மாணவன்- 10 நிமிடம் தாமதமானதால் தேர்வு எழுத முடியாமல் போன சோகம்

பீகாரிலிருந்து கொல்கத்தாவுக்கு 700 கி.மீ தூரம் பயணம் செய்து சென்ற மாணவனுக்கு, 10 நிமிடம் தாமதமானதால் அதிகாரிகள் அவரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

நீட் தேர்வுக்காக பீகாரிலிருந்து கொல்கத்தாவுக்கு 700 கி.மீ பயணித்த மாணவன்- 10 நிமிடம் தாமதமானதால் தேர்வு எழுத முடியாமல் போன சோகம்
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 6:05 PM IST
  • Share this:
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதினார்கள்.

பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சந்தோஷ் குமார் யாதவ். அவர், கடந்த சில மாதங்களாக நீட் தேர்வுக்காக தயாராகிவருகிறார். அவருக்கு நீட் தேர்வு மையம் கொல்கத்தாவில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, அவர் சனிக்கிழை காலை 8 மணிக்கு தர்பாங்கா மாவட்டத்திலிருந்து கிளம்பியுள்ளார். அங்கிருந்து முசாஃபர்பூர் சென்றடைந்து, அங்கிருந்து பாட்னாவுக்கு பேருந்து ஏறிச் சென்றுள்ளார். பாட்னாவுக்கு செல்லும்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்து ஆறு மணி நேரம் தாமதமாக சென்றுள்ளது. பின்னர், பாட்னாவிலிருந்து இரவு 9 மணிக்கு கொல்கத்தாவுக்கு பேருந்து ஏறியுள்ளார்.


அவர் சீல்டா நிலையத்தை அடையும்போது மணி மதியம் 1.06-யை எட்டியது. அங்கிருந்து அவர் கால்டாக்சி பிடித்து நீட் தேர்வு மையத்துக்கு சென்றுள்ளார். தேர்வு மையத்துக்கு 1.30 மணிக்குள் செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தோசால் 1.40 மணிக்குதான் செல்ல முடிந்தது.

10 நிமிடம் தாமதமானதன் காரணமாக அவரைத் தேர்வு எழுதுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர், எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.


இதுகுறித்து தெரிவித்த சந்தோஷ் குமார், ‘நான் அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். அவர், என்னை அனுமதிகவில்லை. தேர்வு 2 மணிக்கு தொடங்கியது. 1.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்கவேண்டும். நான், 1.40 மணிக்கு சென்றடைந்தேன். ஆனால், அனுமதிக்கவில்லை. நான் ஒருவருடத்தை இழந்துவிட்டேன்’ என்று தெரிவித்தார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading