பீகார் மாநிலம் பாகல்பூரில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர்
மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்பலிசக் என்ற இடத்தில் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகேந்திர மண்டல் என்பவர், தனது வீட்டின் அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் இந்த பட்டாசு ஆலை சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவைழைக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் சேதம் அடைந்துள்ளன. படுகாயம் அடைந்த 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க -
உ.பி தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை ரூ.125-வரை அதிகரிக்கலாம் - பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு
வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.