சாலை ஓரத்தில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவல சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அம்மாவட்ட சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் கூறுகையில், "கடந்த புதன்கிழமை, பீகாரின் பெகுசாராய் மாவட்டம் லாகோ காவல் வட்டத்தில் உள்ள நிபானியா கிராமத்தில் சாலையோரம் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதை அடுத்து, சார்பு ஆய்வளார் பொறுப்பு வகித்து வரும் அனில் குமார் சிங், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும், இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லவும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஆனால், இறந்தவரின் உடல் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட வில்லை. இரண்டு துப்புரவுப் பணியாளர்களை கொண்டு அருகில் உள்ள பெகுசாராய் சாதர் மருத்துவமனைக்கு கயிரைக் கட்டி உடலை இழுத்துச் சென்றுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: காரில் கட்டுக்கட்டான பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. ஜார்கண்ட்டில் ஆப்ரேஷன் தாமரை?
மேலும், " இது மனிதாபிமானமற்ற செயல். இறந்தவரின் உடலை இவ்வாறு கையாள அனுமதித்திருக்க கூடாது. இது, மிகவும் துரதிஷ்ட வசமானது. அனில் குமார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்" என்றும் கூறினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக ஊடங்களில் தற்போது அதிகம் பரவப்பட்டு வருகிறது. உடல்சார் தன்மானத்திற்கான உரிமை மற்றும் நடைமுறை சார்ந்த அம்சங்கள் மீறப்பட்டிருப்பதாக சமூக ஊடகப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது மிருகத்தனமான குற்றச் செயலின் அங்கம் என்றும் வேதனை கொள்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.