பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வுசெய்யப்பட வாய்ப்பு.... தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் இன்று ஆலோசனை

மோடி, நிதிஷ் குமார்

பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

 • Share this:
  பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்துள்ளது. கூட்டணியில் அதிகபட்சமாக பா.ஜ.க 74 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனையடுத்து, ஆட்சியமைப்பதற்கான பணிகளை தேசிய ஜனநாயக கூட்டணி தொடங்கி உள்ளது.

  மேலும் படிக்க...மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு....

  இதற்காக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நிதிஷ் குமாரின் இல்லத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது, கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களின் கூட்டத்தை இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று நண்பகல் 12.30 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், புதிய முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிதாக ஆட்சியமைப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

  மேலும் படிக்க...தடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மோசமானது காற்றின் தரம்- மக்கள் அவதி  இதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமைகோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இன்று நடக்கும் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vaijayanthi S
  First published: