• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2020: முதற்கட்ட பிரசாரம் ஓய்ந்தது

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2020: முதற்கட்ட பிரசாரம் ஓய்ந்தது

பீகார் தேர்தல்

பீகார் தேர்தல்

  • Share this:
    பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பிரசாரம் மாலையுடன் நிறைவுபெற்றது.

    பீகார் மாநிலத்தில் முதற்கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 28ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இத்தொகுதிகளுக்கான பரப்புரை மாலையுடன் நிறைவுபெற்றது. முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில் இறுதிக்கட்டப் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், அரசியல் அனுபவம் இல்லாத சிலர் தன்னை விமர்சித்து வருவதாக தேஜஸ்வி யாதவை மறைமுகமாக சாடினார். சிலர் குடும்ப உறவுகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் தருவதாக குறிப்பிட்ட நிதிஷ்குமார், தனக்கு பீகாரில் உள்ள ஒவ்வொரு குடும்பமுமே உறவு தான் என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    இதனிடையே வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது குறித்து, பாஜகவினர் அமைதி காப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார். பீகாரில் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தேஜஸ்வி புகார் கூறினார்.



    இதனிடையே, பாஜகவினர் சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் போஸ்டர்களில், நிதிஷ் குமார் படம் தவிர்க்கப்பட்டு மோடியின் படம் மட்டும் பிரமாண்டமாக இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் அவரவர் தலைவர்களை முன்னிலைப்படுத்தி தனியாக போஸ்டர்கள் வெளியிட்டிருப்பது, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

    Also read: பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் - கருத்துகணிப்பு முடிவுகள்

    இந்நிலையில், டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்து கணிப்பின் படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 147 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 77 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 66 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் அணி 87 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: