அழிவின் விளிம்பில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி!

பீகாரில் உள்ள 42 சதுரகி லோமீட்டர் தூரம் பரவியிருந்த காவர் ஏரி தற்போது வெகுவாக சுருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அழிவின் விளிம்பில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி!
காவர் ஏரி
  • News18
  • Last Updated: July 10, 2019, 10:33 AM IST
  • Share this:
பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான காவர் ஏரி தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த ஏரி 60 வகையான வெளிநாட்டு பறவையினங்களும், 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு பறவையினங்களும் தங்கும் சரணாலயமாகும். இந்த ஏரி தற்போது முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது.

காவர் ஏரியில் உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வரும் வெளிநாட்டு பறவையினங்களும் பல மாதங்கள் தங்கியிருக்கும். இதனால் பீகார் அரசு இந்த ஏரியை பறவைகள்  சரணாலயமாக அறிவித்துள்ளது.

பறவைகள் சூழ்ந்த ரம்யமான காட்சியை காண்பதற்காகவே சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர். அழகான ஓவியம் போல் இருந்த இந்த ஏரி தற்போது வறண்டு போயுள்ளது. 42 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த ஏரி தற்போது சுருங்கி வருகிறது.


பறவைகள்  சரணாலயமாக இருந்த காவர் ஏரி


ஒரு காலத்தில் சலசலக்கும் ஓசையுடன் தண்ணீர் தளும்ப தாளமிட்ட இந்த ஏரியில் தற்போது நிலைத்திருப்பது மயான அமைதிதான். இந்த ஏரியைச்சுற்றி இருந்தவர்களின் நீராதாரமே இந்த ஏரிதான்.

ஆனால் வறட்சியின் காரணமாக ஏரிக்கும் பொதுமக்களுக்குமிடையே இருந்த பந்தம் அறுந்துவிட்டது. இந்த ஏரிக்கு நீர் வரும் வழிகள் எல்லாம் தூர்ந்து போனதாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை.இங்கு மட்டுமல்ல எங்குமே தண்ணீர் இல்லை. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் பறவைகளுக்கு கூட தண்ணீர் இல்லை. தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர்.

42 சதுரகி லோமீட்டர் தூரம் பரவியிருந்த காவர் ஏரி தற்போது வெகுவாக சுருங்கிவிட்டது என்கிறார் அங்கு வசிக்கும் முதியவர். இதே போல் ஒரு  காலத்தில் நீர் நிரம்பி காணப்பட்ட ரத்னபூர் குளம் தற்போது சுத்தமாக வறண்டு விட்டது.

அழிவின் விழிம்பில் காவர் ஏரி


இதனால் இந்த குளம் சிறுவர்களின் கிரிக்கெட் மைதானமாகிவிட்டது. இந்தக் குளம் மட்டுமல்ல, அங்குள்ள பெரும்பாலான குளங்களின் நிலையும்  இதுதான் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் தற்போது ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்காகவும் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க... முகிலன் கடத்தப்பட்டாரா? தலைமறைவாக தலமறைவாக இருந்தாரா?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading