23 வயதே ஆன ‘பிக் பாஸ்' மேலாளர் சாலை விபத்தில் மரணம் - போட்டியாளர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல்

பிஸ்தா தகட், பிக் பாஸ் மட்டுமல்லாது மற்றொரு ரியாலிட்டி ஷோவான Khatron Ke Khiladi-லும் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

பிஸ்தா தகட், பிக் பாஸ் மட்டுமல்லாது மற்றொரு ரியாலிட்டி ஷோவான Khatron Ke Khiladi-லும் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

  • Share this:
நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் தொடரில் திறன் மேலாளராக பணியாற்றி வந்த இளம் பெண், சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் முன்னாள் போட்டியாளர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

பிற மொழி பிக் பாஸ் தொடர்களுக்கெல்லாம் முன்னதாகவே தொடங்கப்பட்டது இந்தி பிக் பாஸ். 2006ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் இத் தொடரினை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இத்தொடரின் திறன் மேலாளராக பணியாற்றி வந்த 23 வயதே ஆன பிஸ்தா தகட் என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார்.  கடந்த ஜனவரி 15ம் தேதியன்று மும்பை ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற பிக் பாஸ் ஷூட்டிங்கில் பங்கேற்ற பிஸ்தா தகட் இரவு நேரத்தில் தனது உதவியாளருடன் இருசக்கர வாகனம் ஒன்றில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வெளிச்சம் இல்லாத சாலையில் வந்த போது அங்கிருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பிஸ்தா தகட்டின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உதவியாளர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Yuvikachaudhary (@yuvikachaudhary)


பெண் மேலாளரின் எதிர்பாராத உயிரிழப்பு முன்னாள் போட்டியாளர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான ஷெனாஸ் கில், யுவிகா சவுத்ரி என பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எண்டமோல் ஷைன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிஸ்தா, பிக் பாஸ் மட்டுமல்லாது மற்றொரு ரியாலிட்டி ஷோவான Khatron Ke Khiladi-லும் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
Published by:Arun
First published: