UP zila panchayat Election: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் 2021: எதிர்கட்சிகளை கபளீகரம் செய்தது பாஜக!

பாஜக

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி மொத்தமாக 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்கட்சிகளை துவம்சம் செய்து மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஜில்லா பரிஷத் எனப்படும் மாவட்ட சேர்மன் தேர்வுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. மொத்தம் 75 மாவட்டங்களுக்கான சேர்மன்கள் இன்று தேர்வாகினர். இத்தேர்தலில் போட்டியிடாமல் பகுஜன் சமாஜ் கட்சி வெளியேறிய நிலையில் எதிர்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

2022ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிக முக்கியத்துவமாக கருதப்படுவதால் நாடு முழுவதும் அரசியல் விமர்சகர்களால் இந்த தேர்தல் முடிவு உற்றுநோக்கப்பட்டது.

இந்த நிலையில் மொத்தம் உள்ள 75 இடங்களில் பாஜக 66 இடங்களிலும், பாஜக கூட்டணியில் உள்ள அப்னா தளம் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒரு இடத்திலும் என மொத்தமாக 67 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.

Also read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

ஏற்கனவே, தேர்தல் நடைபெறும் முன்னதாகவே 21 இடங்களில் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர்கள் வெற்றியை பதிவு செய்திருந்தனர்.

இத்தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி மொத்தமாக 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அப்னா தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போல இரண்டு இடங்களில் சுயேட்சைகளும், ஒரு இடத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியால் இத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மேலும் அக்கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட ரேபரேலியில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பொதுவான வேட்பாளரை நிறுத்திய போதிலும் அங்கு பாஜக வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Also read:   நாங்கல்லாம் விமானத்தில் இருந்தே ஜம்பிங்கில் இறங்குனவங்க.. ! விரக்தியில் விமான பயணி செய்த விநோத செயல்!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் மோடி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும், உ.பி பாஜகவினருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், உள்ளாட்சித் தேர்தல் வெற்றியானது வளர்ச்சி, மக்கள் சேவை, பாஜக தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். முதல்வர் யோகியின் கொள்கைகளுக்கே இந்த வெற்றி உரித்தாகும். பாஜக மற்றும் உத்தரப்பிரதேச அரசை பாராட்டுகிறேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.



முன்னதாக கடந்த மே மாதத்தில் அங்கு 3,050 பஞ்சாயத்து வார்டுகளுக்காக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 790 இடங்களையும், சமாஜ்வாதி 719 இடங்களையும், காங்கிரஸ் 76 இடங்களிலும், சிறிய கட்சிகள், சுயேட்சைகள் 114 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்படுவதால் பாஜக புதிய தெம்புடன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்.
Published by:Arun
First published: