Home /News /national /

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறையில் 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

    பாதுகாப்புத் துறையில் 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

    பாதுகாப்பு அமைச்சகம், ஆத்மநிர்பார் பாரத் என்னும் தற்சார்பு பொருளாதார முயற்சியில் ஒரு பெரிய முன்னெடுப்பைச் செய்ய தயாராகி இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் 101 ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை செய்து, அதை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிக்கு தயாராகியுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

    இந்த தடையை படிப்படியாக 2024-க்கு முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ரூபாய் நான்கு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2015 முதல் தற்போது வரை ரூபாய் 3.5 லட்சம் கோடி மதிப்பிலான அதிநவீன ரேடார்கள், சோனார் கருவிகள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்ட 260 வகையான தளவாடங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செயப்பட்டுள்ளன.

    101 தடை செய்யப்பட்ட தயாரிப்புகள் என்பது எளிய உதிரிபாகங்கள் அல்ல. ஆர்டிலரி துப்பாக்கிகள், அசால்ட் ரைஃபில்ஸ், சோர்வெட்ஸ், சோனார் அமைப்புகள், ஏர்கிராஃப்ட், எல்.சி.ஹெச்-கள், ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு சேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய முக்கிய பாகங்கள் தயாரிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான இந்த அறிவிப்பு, சாலைப் போக்குவரத்து குறித்து அமைச்சர் நிதின் கட்சரி, இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் பிரிவுகளைக் கண்டறிந்து அதற்குச் சமமான இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கவேண்டும் என்னும் அறிவிப்புக்கு அடுத்த நாளே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Border Security Force, India, India vs China, Rajnath singh

    அடுத்த செய்தி