Home /News /national /

குடும்ப அரசியல் செய்யும் கட்சியினரால் ஜனநாயகத்துக்கு பெரும் சிக்கல்: பிரதமர் மோடி

குடும்ப அரசியல் செய்யும் கட்சியினரால் ஜனநாயகத்துக்கு பெரும் சிக்கல்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

குடும்ப அரசியல் செய்யும் கட்சியினரால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயகத்துக்கு பெரிய சிக்கல் ஏற்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :
    2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    பின்னர், டிஜிட்டல் வடிவிலான அரசியலமைப்பு சட்ட பதிப்பை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பத்கருக்கு புகழாரம் சூட்டினார். அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட தொடங்கிய போதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாக கூறினார். சட்ட மேதை அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தவே அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதாகவும் மோடி விளக்கம் அளித்தார். பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ஆட்சி செய்வதால் ஜனநாயகத்துக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

    இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களை வணங்குவதாகவும் பிரதமர் கூறினார். மும்பை தாக்குதலின்போது வீரமரணமடைந்த பாதுகாப்புப் படையினரையும் மோடி தனது உரையின் போது நினைவு கூர்ந்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதாக கூறினார். தொடக்கம் முதலே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் அளித்து வருவதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திற்கு பெண்களின் பங்கு அளப்பரியது என்றும் கூறினார். பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை வாசித்தார்.

    துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பகேற்றனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் நாடாளுமன்ற நிகழ்வை புறக்கணித்தன. மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்குவதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, PM Modi

    அடுத்த செய்தி