Home /News /national /

'இந்தியாவின் வாரன் பஃபெட்' தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

'இந்தியாவின் வாரன் பஃபெட்' தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

Rakesh Jhunjhunwala: 1985ஆம் ஆண்டில் ரூ.5,000 பங்குச்சந்தையில் இவர் முதலீடு செய்த நிலையில், இந்த முதலீடு படிப்படியாக வளர்ந்து 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ரூ.11,000 கோடியாக மதிப்பு உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாட்டின்  முன்னணி பங்கு முதலீட்டாளரும் பணக்காரருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கேன்டி பிரீச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராகேஷ் இன்று அதிகாலை 6.45 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளராக கருதப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்தியாவின் வாரன் பஃபெட் என அழைக்கப்படுகிறார். தனது கல்லூரி காலத்திலேயே பங்குச்சந்தையில் நாட்டம் கொண்ட ராகேஷ், 1985ஆம் ஆண்டில் ரூ.5,000 பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். இந்த முதலீடு படிப்படியாக வளர்ந்து 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ரூ.11,000 கோடியாக மதிப்பு உயர்ந்துள்ளது.

    ஹங்காமா மீடியாஸ அப்டெக், வைசராய் ஹோடல், கான்கார்டு பயோடெக் போன்ற நிறுவனங்களின் தலைவராக இருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஏர் ஆகாச என்ற புதிய விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் விமான சேவை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கேற்றார். இதுவே இவர் பங்கேற்ற கடைசி பொது நிகழ்வு.

    இதையும் படிங்க: அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி - நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கொடி ஏற்றி கொண்டாட்டம்

    பல்வேறு உடல்நல கோளாறுகளால் சிக்கித் தவித்து வந்த ராகேஷ், நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்து உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவிக்கிறது.  ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "சிறந்த அறிவு திறன் கொண்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நிதி உலகிற்கு ஆற்றிய கொடை அளப்பரியது. இந்தியாவின் வளர்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரின் மறைவு மிகுந்த துயரத்தைத் தருகிறது.


    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி" எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Mumbai, PM Modi, Stock market

    அடுத்த செய்தி