Home /News /national /

பெரிய அண்ணன்' இந்தியாவுக்கு நன்றி.. இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா நெகிழ்ச்சி..

பெரிய அண்ணன்' இந்தியாவுக்கு நன்றி.. இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா நெகிழ்ச்சி..

இந்தியா போன்ற நாடுகளின் உதவியால் நாங்கள் இந்த கஷ்டமான நிலையிலிருந்து வெளியே வருவோம் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா போன்ற நாடுகளின் உதவியால் நாங்கள் இந்த கஷ்டமான நிலையிலிருந்து வெளியே வருவோம் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா போன்ற நாடுகளின் உதவியால் நாங்கள் இந்த கஷ்டமான நிலையிலிருந்து வெளியே வருவோம் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நெருக்கடியான சூழலில் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து உதவி செய்யும் இந்தியாவுக்கு நன்றி என முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா பேட்டியளித்துள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவிவருகிறது. அடிப்படை பொருள்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர்.

    இலங்கையின் இந்த சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசு அவசர கால உதவிகளை வழங்கிவருகிறது. இந்திய அரசின் இந்திய உதவிக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

    ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எங்கள் அண்டை நாடான இந்தியா,பெரிய அண்ணன் ஸ்தானத்தில் இருந்து எப்போதும் உதவிவருகிறது. இந்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நாங்கள் நன்றியுடன் இருப்போம்.

    ரஷ்யா தாக்குதல்: குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க வைக்கும் உக்ரைன் தாய்மார்களின் பதிவுகள்!

    தற்போது நிலவும் சூழலை நாங்கள் தாக்குப்பிடிப்பது கடினம். இந்தியா போன்ற நாடுகளின் உதவியால் நாங்கள் இந்த கஷ்டமான நிலையிலிருந்து வெளியே வருவோம் என நம்புகிறேன்.

    இலங்கையின் தற்போதைய சூழல் துரதிஷ்டமானது. மக்கள் வாழ முடியாத சூழலில் உள்ளதால்தான் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் 10-12 மணிநேர மின்தடை ஏற்படுகிறது. எரிபொருள், கேஸ் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சூழலுக்கு தற்போதைய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசு முறையாக எதிர்கொள்ளாவிட்டால் நிலைமை பேரழிவில் கொண்டு தள்ளிவிடும்.

    மக்கள் வன்முறை இன்றி அமைதி வழியில் போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தங்களின் நியாமான கோரிக்கைகளை வெளியே வந்து அமைதியான முறையில் முன்வைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

    இலங்கையில் ஆளும் அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர் போராட்டத்தை நடத்திவருகின்றன. ஆளும் ராஜபக்ஷே கூட்டணியிலிருந்து உறுப்பினர்கள் வெளியேறியதால் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. அதிபர் கோத்தபயா மற்றும் பிரதமர் மகிந்தா பதவிவிலக வேண்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். ஆனால் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என அதிபரும், பிரதமரும் விடாப்பிடியாக உள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Srilanka

    அடுத்த செய்தி