Home /News /national /

Bible | மாணவர்கள் பைகளில் பைபிள் கட்டாயம் - ஹிஜாபுக்கு அடுத்து கர்நாடகாவில் அடுத்த சர்ச்சை

Bible | மாணவர்கள் பைகளில் பைபிள் கட்டாயம் - ஹிஜாபுக்கு அடுத்து கர்நாடகாவில் அடுத்த சர்ச்சை

மாதிரி படம்

மாதிரி படம்

Bible in Karnataka School | கர்நாடகாவில் ஜிஜாப் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில் தனியார் பள்ளி ஒன்று தங்கள் மாணவர்கள் பைபிளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சர்ச்சை கிளப்பியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் அனைத்து மாணவர்களும் பைபிள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அதேவேளை, இதற்கான அனுமதியை மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நன்நெறி, ஆன்மீக கருத்துக்களை பள்ளி போதிக்க உள்ளது. அதற்கு பெற்றோர்களின் சம்மதம் தேவை எனக் கூறி அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டே பைபிள் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் கொண்ட புத்தகங்களை பள்ளி நிர்வாகம் அவர்களிடம் தந்துள்ளது என கூறப்படுகிறது.

    பள்ளியின் இந்த உத்தரவுக்கு வலதுசாரி, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இது கர்நாடகா கல்வி சட்டத்திற்கு எதிரானது என சில அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடகா கல்வி அலுவலர் பள்ளியை பார்வையிடவுள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் கர்நாடகா கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பள்ளியின் முதல்வர் ஜெர்ரி ஜார்ஜ் மேத்யூ கூறுகையில், "பள்ளியின் இந்த செயலால் சிலர் அதிருப்தியில் உள்ளதை நிர்வாகம் புரிந்துகொள்கிறது. நாங்கள் அமைதியையும், சகோதரத்துவத்தையும் விரும்புபவர்கள். சட்டத்தை மதித்து நடக்கவே நாங்கள் விரும்புகிறோம். இதற்காக வழக்கறிஞர்களின் ஆலோசனையை பெறவுள்ளோம்" என்றார்.

    இதையும் படிங்க: சட்டவிரோத ஆயுத பயிற்சி - தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவோயிஸ்டுகள் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    ஏற்கனவே, கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த சர்ச்சை மத மோதலாக உருவெடுத்தது. கல்வி நிறுவனங்களில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்றும், ஹிஜாப் அணிய தடை விதித்தும் மாநில அரசு உத்தரவிட்டதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்த்து பதில் போராட்டம் நடத்திய நிலையில் இது வன்முறையாக மாறியது. இதையடுத்து விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், சீருடை மட்டுமே அணிய வேண்டும் ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சலசலப்பு ஓய்ந்து ஒரு மாதம் முடியாத நிலையில், தற்போது புதிய சர்ச்சையாக இந்த பைபிள் விவகாரம் உருவெடுத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bangalore, Karnataka, School Bag

    அடுத்த செய்தி