Home /News /national /

பூடான் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு

பூடான் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு

கொரோனா காலத்தின்போது, இந்தியா பூடானுக்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பூடானுக்கு வழங்கியுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பூடான் நாட்டின் உயரிய விருதான 'கடாக் பெல் வி கோர்லோ' விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் பிரதமர் லோதே ஷெரிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு பூடானின் உயரிய சிவிலியன் விருதான கடாக் பெல் வி கோல்லோ விருது வழங்கப்படுகிறது. பூடானுடன் பல ஆண்டுகளாக இந்தியா நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. கொரோனா காலத்திலும், பல உதவிகளை இந்தியா செய்ததை நினைவுகூர்கிறோம்.

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து உதவி செய்து வரும் இந்தியாவுக்கும், அதன் பிரதமர் மோடிக்கும் பூடான் அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த விருதை பெறுவதற்கு பிரதமர் மோடி பொருத்தமானவர். பூடான் மக்களின் அன்பை பெற்றவராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவருக்கு விருது வழங்கும் நாளை நான் எதிர்பார்த்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : Annamalai | திமுகவினருக்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’ - பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

    கடந்த ஆண்டு பூடான் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தினார்.

    இதையும் படிங்க : நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளியில் சுவர் இடிந்து 2 மாணவர்கள் பலி

    அங்கு இந்தியாவின் உதவியோடு ஹைட்ரோ-பவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலைகள் இணைப்பு, விண்வெளி, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க : சிறுமிகள் மர்மக் கொலை: பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது - அன்புமணி
     கொரோனா காலத்தின்போது, இந்தியா பூடானுக்கு 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பூடானுக்கு வழங்கியுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Narendra Modi

    அடுத்த செய்தி