• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு!

சத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு!

பூபேஷ் பாகெல்

பூபேஷ் பாகெல்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பதவிக்கு பூபேஷ் பாகெல், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் டி.எஸ்.சிங்தியோ உள்ளிட்டோருக்கு இடையே போட்டி நிலவியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சத்தீஸ்கர் முதலமைச்சராக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் 68 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.

    முதலமைச்சர் பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெல், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் டி.எஸ்.சிங்தியோ, மக்களவை உறுப்பினர் தம்ரத்வாஜ் சாஹூ உள்ளிட்டோருக்கு இடையே போட்டி நிலவியது. அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார்.

    மூன்றாவது முறையாக நேற்று இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைநகர் ராய்ப்பூரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சத்தீஸ்கர்  முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டார்.

    முன்னதாக, ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், மத்தியப் பிரதேச முதலமைச்சராக கமல்நாத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3 மாநிலங்களிலும் புதிய அரசு நாளை பதவியேற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று விழாக்களிலும் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: