ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்பு.. பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

குஜராத் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்பு.. பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

பூபேந்திர பட்டேல்

பூபேந்திர பட்டேல்

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் வரும் 12 - ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பூபேந்திர பட்டேல் வரும் 12 - ஆம் தேதி பதவியேற்கிறார். 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக செய்த சிறப்பான பணியை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளதாக பட்டேல் தெரிவித்துள்ளார்

அகமதாபாத் மாவட்டத்தின் கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட பூபேந்திர பட்டேல் 1 லட்சத்து 92 ஆயிரத்து 765 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 60 வயதான பூபேந்திர பட்டேல் கட்டட பொறியாளர் படிப்பில் டிப்ளமோ பெற்றவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர பற்றாளரான பட்டேல், அகமதாபாத் மாவட்டத்தில் பட்டிதார் சமூகத்தின் முகமாக பார்க்கப்படுகிறார்.

இதையும் படிங்க: நாளை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் மாண்டஸ்.. கட்டாயம் இதையெல்லாம் வாங்கி வச்சுக்கோங்க மக்களே!

உள்ளாட்சி தேர்தலின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பட்டேல், 2017- ஆம் ஆண்டு கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளர் சஷிகாந்த பட்டேலை விட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குஜராத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார் பூபேந்திர பட்டேல்.

குஜராத் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி , 2021- ஆம் ஆண்டு திடீரென பதவி விலகினார். இதனை தொடரந்து பூபேந்திர பட்டேல் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். மோடியை போலவே எந்த அமைச்சர் பதவியையும் வகிக்காமால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர் பூபேந்திர பட்டேல் என்பது குறிப்பிடதக்கது.

குஜராத் முதல்வராக பூபேந்திர பட்டேல் வரும் 12-ம் தேதி பதவியேற்கும் நிகழ்ச்சியல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

First published:

Tags: Gujarat Assembly Election