ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் முதல்வராக இன்று பதவியேற்கும் பூபேந்திர படேல்... பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு!

குஜராத் முதல்வராக இன்று பதவியேற்கும் பூபேந்திர படேல்... பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு!

குஜராத் முதல்வர்

குஜராத் முதல்வர்

Bhupendra Patel : குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 156 இடங்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காந்திநகரில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக நேற்றிரவு அகமதாபாத்துக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் நிலையில், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று பூபேந்திர படேலுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, இமாச்சலப்பிரதேசத்தின் 15-வது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு நேற்று பதவியேற்றார். இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடும் போட்டிக்கு மத்தியில் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு தேர்வு செய்யப்பட்டார். சிம்லா-வில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், 15-வது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு-வுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

First published:

Tags: Assembly Election 2022, Gujarat Assembly Election