• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • போபாலில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக போலியாக பணம் வசூல்...!

போபாலில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக போலியாக பணம் வசூல்...!

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையிலும் இந்தக் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான வேலைகளும் தடபுடலாக நடந்து வருகிறது. இந்தியாவின் மூளை முடுக்கிலிருந்தெல்லாம் ராமர் கோயிலுக்கு நிதி, ஆபரணங்கள், புனித பொருட்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ராமர் கோயிலை பயன்படுத்தி சில நாசகார வேலைகளும் பின்புறம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 

அந்தவகையில், அயோத்தியில் ராமரின் கோயில் கட்டுவதற்காக போலி பண வசூலில் ஈடுப்பட்ட போபாலை சார்ந்த 30 வயது நபர் மீது மத்திய பிரதேச போலீசார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டத்தின் 420 (மோசடி) மற்றும் 120 பி (கிரிமினல் சதித்திட்டத்தின் தண்டனை) பிரிவுகளின் கீழ் (Under sections 420, 120 b) அசோகா கார்டனில் வசிக்கும் மனிஷ் ராஜ்புத் (Manish Rajput) மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போபால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் படோரியா (Rajesh Bhadoria) தெரிவித்தார். 

இதுகுறித்து நகர ASP கூறுகையில், “விஸ்வ இந்து பரிஷத்தின் (Vishwa Hindu Parishad (VHP)) உள்ளூர் தலைவரான யதேந்திர பால் சிங் (Yatendra Pal Singh) இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசில் ஒரு புகாரை அளித்தார். அதில், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராஜ்புத் என்ற நபர், ராமபிரான் கோயிலுக்கு நிதி சேகரிப்பதற்காக, 'ராம் ஜன்மபூமி சங்கல்ப் சொசைட்டி' ('Ram JanmaBhoomi Sankalp Society') என்ற ஒரு போலி அமைப்பை உருவாக்கினர். ராஜ்புத் கடந்த சில நாட்களாக அசோக் கார்டன் பகுதியில் நிதி சேகரித்துக் கொண்டிருந்தார், மேலும் நன்கொடையாளர்களுக்கு சீட்டுகளையும் வழங்கினார்.

Also read... 'எங்க அப்பா தான் ஹீரோ' - மனம் திறக்கும் ஜெஸி பிரசாந்தி டி.எஸ்.பி!

 "புகாரில், யதேந்திர பால் சிங், ராஜ்புத் மக்களிடமிருந்து பணத்தை சேகரிக்க ஒரு ட்ரைவை நடத்தி வந்ததாகக் கூறினார், அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மக்களின் பணத்தை பறித்தார்," என்று அதில் குறிப்பிட்டிருந்தார். காவல்துறையினர் இந்த விவகாரத்தை விசாரித்தபோது, ராஜ்புத் ஒரு போலி பண சேகரிப்பு ட்ரைவை வைத்திருப்பதையும், அதன்மூலம் மக்களை ஏமாற்றுவதையும் கண்டறிந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார். கோயில் கட்டுமானத்திற்காக நன்கொடைகள் சேகரிப்பு என்ற போலிக்காரணத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக, அவர் இந்த வேலையை தனியாக செய்கிறாரா அல்லது அவருக்கு பின்னால் ஏதேனும் குழு உள்ளதா என்பதை அறிய காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக காவல்துறை துணை ஆய்வாளர் (DIG) இர்ஷாத் வாலி (Irshad Wali) தெரிவித்தார்.

இந்த ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையிலும் இந்தக் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைத் திரட்டும் பணிகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிதியை திரட்டும் பணிகள் ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: