முகப்பு /செய்தி /இந்தியா / ''குடிபோதையில் அந்தரங்க உறுப்புகளை தொட்டார்''.. பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை பரபரப்பு புகார்!

''குடிபோதையில் அந்தரங்க உறுப்புகளை தொட்டார்''.. பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை பரபரப்பு புகார்!

ஸ்வப்னா

ஸ்வப்னா

குடிபோதையில் பிருத்வி ஷா தனது அந்தரங்க உறுப்புகளை சீண்டி அத்துமீறியதாக நடிகை ஸ்வப்னா கில் புகார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இரவு முன்னணி இளம் கிரிக்கெட் வீரரான பிருத்வி ஷாவுக்கும் நடிகையை ஒருவருக்கும் ஹோட்டல் வாசலில் மோதல் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ தினத்தின் இரவு ப்ரித்வி ஷாவும் அவரது நண்பர்களும் மும்பையில் உள்ள சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இரவு உணவிற்குச் சென்றனர்.

அப்போது அங்கு நண்பர்களுடன் வந்திருந்த நடிகை சப்னா கில் பிருத்வி ஷாவிடம் செல்ஃபிக்கு வேண்டுகோள் விடுத்தார். பிருத்வி ஷா சம்மதம் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் மேலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரித்வி ஷாவை வற்புறுத்தியதால் அதிருப்தி அடைந்த ஷா, மேனேஜரிடம் புகார் அளிக்க, ஹோட்டல் நிர்வாகத்தினர் அவர்களை ஹோட்டலை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இது சப்னா கில் தரப்பை ஆத்திரமூட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து பிருத்வி ஷா தனது நண்பருடன் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது, சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் பிருத்வி ஷாவின் காரை துரத்திச் சென்று பேஸ்பால் மட்டையால் அவர்களது காரை அடித்து நொறுக்கினர்.இந்த சம்பவத்தில் சப்னா கில்லுக்கும் பிருத்வி ஷாவுக்கு கைகலப்பு வெடித்த நிலையில், ஸ்வப்னா கில் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்தேரி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடிகை ஸ்வப்னா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், பிணையில் வெளிவந்த ஸ்வப்னா பிருத்வி ஷா மீது அடுக்கடுக்கான புகார் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா தான் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததாகவும், பிருத்வி ஷாவும் அவரது நண்பர்களும் தான் தனது நண்பர்களை தாக்கியதாகவும் ஸ்வப்னா குற்றஞ்சாட்டினார்.

தட்டிக்கேட்ட தன்னிடம் பிருத்வி ஷா தகாத வார்த்தைகளை பேசி திட்டியதாகவும், தனது அந்தரங்க உறுப்புகளை தொட்டு சீண்டி அத்துமீறியதாகவும் ஸ்வப்னா புகார் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் தன்னிடம் அத்துமீறியதாக நடிகை ஸ்வப்னா குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Prithivi shaw