உ.பியில் பாஜகவுக்கு எதிரான புதிய கட்சியாக உருவெடுக்கும் ‘பீம் ஆர்மி’

news18
Updated: June 13, 2018, 12:14 PM IST
உ.பியில் பாஜகவுக்கு எதிரான புதிய கட்சியாக உருவெடுக்கும் ‘பீம் ஆர்மி’
‘பீம் ஆர்மி’
news18
Updated: June 13, 2018, 12:14 PM IST
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக  ‘பீம் ஆர்மி’ எனும் புதிய கட்சி உருவெடுத்து வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலம், சஹரன்பூர் நகரில் கடந்த 2017ல் நடந்த ஊர்வலத்தில் தாக்கூர் பிரிவனருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கும் இடையே கலவரம் நிகழ்ந்தது. அப்போது பீம் ஆர்மியின் நிறுவனரும் தலைவருமான ராவண் என்பவர்  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ‘பீம்ஆர்மி’ எனும் பெயர் உத்தரபிரதேச மக்களிடத்தில் பிரபலமடைந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற கைரானா மற்றும் நூர்பூர் தொகுதி இடைத்தேர்தலின் போது பீம் ஆர்மியை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அது பாஜகவுக்கு பெரும் சரிவாக அமைந்தது. இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய ‘பீம் ஆர்மி’ அமைப்பின் பொதுச்செயலாளர் வினய் ரதன் சிங் “நாங்கள் ஒரு அரசியல் கட்சி அல்ல, விளிம்பு நிலை மக்களை, குறிப்பாக தலித்துகளை மேம்படுத்துவதற்காக பாபா சாகேப்  அம்பேத்கரின் தத்துவங்களை பின்பற்றுபவர்கள். பாஜக மற்றும்  ஆர்எஸ்எஸ் வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவதால் அவற்றுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்” என  என தெரிவித்தார்.

மேலும், தனது அமைப்பின் நிறுவனர் ராவணை விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பாஜக அரசு எவ்வாறு தன்னிச்சையாக செயல்பட்டு அதற்கு எதிராக செயல்படுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்கிறது என்பது குறித்தெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...