பாரதியார் வாரணாசியில் உள்ள தனது அத்தை வீட்டில் கடந்த 1898ம் ஆண்டு முதல் 1902ம் ஆண்டு வரை வசித்தார். சிவமடம் என்று பெயரிடப்பட்ட அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்ற போதிலும், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தார்.
காசியில் வாழ்ந்த காலத்தில் மதன் மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் அம்மையார், பாலகங்காதர திலகர் போன்ற முக்கிய அரசியல் ஆளுமைகளைச் சந்தித்து பல்வேறு தெளிவுகளைப் பெற்றார்.
பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டில் தற்போது அவருடைய வழித்தோன்றல்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் அனுமதியை பெற்று அந்த வீட்டை புதுப்பிக்க முடிவு செய்திருப்பதாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவரும், வாரணாசி மாவட்ட ஆட்சியருமான ராஜலிங்கம் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “மகாகவி பாரதியார் 4 ஆண்டுகள் வாழ்ந்த வீடான சிவமடத்தை புதுப்பிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பாரதியார் இங்கு இருக்கும்போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவே நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “அந்த வீட்டில் தற்போது பாரதியாரின் வழி வந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாய பிரச்சனைகளையும் பாரதியார் எப்படி தனது கவிதைகள் மூலம் அணுகினார் என்ற முக்கிய தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது இலக்கிய படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து, “பாரதியார் வாழ்ந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பாரதியின் மார்பளவு வெண்கல சிலையுடன் கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Mahakavi Bharathiyar, Varanasi