கோவேக்சின் தடுப்பூசி விலை நிர்ணயம் - மாநில அரசுக்கு ரூ.600: தனியாருக்கு ரூ.1,200

கோவேக்சின்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான கோவேசினின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று ஒருபுறம் வேகமெடுத்து வந்தாலும், மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி தற்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  இந்தியாவில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனிடையே கோவிஷீல்ட் விலையை 2 மடங்கு உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் 600 ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50சதவீதம் தடுப்பூசிகள் மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

  இந்தநிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேசினின் விலை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸின் விலை 600 ரூபாயும் என்றும் தனியாருக்கு ஒரு டோஸின் விலை 1,200 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய உற்பத்தியில் 50 சதவீதம் மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். கேரளா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: