முகப்பு /செய்தி /இந்தியா / திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வு முழுமையும் இசைத்துறைக்கு அர்ப்பணித்த லதா மங்கேஷ்கர்...

திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வு முழுமையும் இசைத்துறைக்கு அர்ப்பணித்த லதா மங்கேஷ்கர்...

லதா மங்கேஷ்வர்

லதா மங்கேஷ்வர்

இசைத்துறையில் உச்சத்தை தொட்டபோதிலும் எந்தவொரு சர்ச்சையிலும் லதா மங்கேஷ்கர் சிக்காமல் இருந்தார். இது அவர் மீதான மதிப்பு மென்மேலும் உயர்வதற்கு காரணமாக அமைந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் இன்று தனது 92வது வயதில் உயிரிழந்திருப்பது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவரது மறைவுக்கு நாட்டின் பிரதமர் முதல் கடைக்கோடி சாமானியர் வரையில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1929 செப்டம்பர் 29-ம்தேதி லதா மங்கேஷ்கர் பிறந்தள்ளார். அவரது தந்தையான தீனாநாத் மங்கேஷ்கர் ஒரு மராத்தி மற்றும் கொங்கனி மொழி இசையமைப்பாளராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கோவாவின் மங்கேஷி நகரம்தான், தீனநாத்தின் சொந்த ஊராகும். இதை அடைமொழியாக அவர் மங்கேஷ்கர் என வைத்துக் கொண்டார். அது, லதா வரையிலும் தொடர்ந்து லதா மங்கேஷ்கர் என்ற பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டுள்ளது. தனது 5 வயதில், தந்தையிடம் இசை கற்றுக்கொண்ட லதா, தந்தை நடத்திய நாடக குழுவில் நடித்தும் வந்தார்.

1942-ல் லதாவுக்கு வயது 13 ஆக இருந்தபோது, அவரது தந்தை காலமானார். அப்போது, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் விநாயக் தாமோதர், லதாவுக்கு வாய்ப்பு அளித்து, பாடகியாக அவரது பயணம் ஆரம்பிப்பதற்கு உதவினார்.

இசைத்துறையில் உச்சத்தை தொட்டபோதிலும் எந்தவொரு சர்ச்சையிலும் லதா மங்கேஷ்கர் சிக்காமல் இருந்தார். இது அவர் மீதான மதிப்பு மென்மேலும் உயர்வதற்கு காரணமாக அமைந்தது. அனைத்து செல்வங்களையும் பெற்றபோதிலும், திருமணமாகாத வாழ்க்கையையே லதா மங்கேஷ்கர் தேர்வு செய்தார்.

இதையும் படிங்க : லதா மங்கேஷ்கர் மறைவு.. நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..

திருணம உறவு, குழந்தைகள் தொடர்பான கேள்விகளுக்கு லதா எப்போதும் பதில் அளித்தது கிடையாது. மிகவும் அரிதாக, உங்களது மனம் கவர்ந்தவர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருந்தார். 'என் மனதிற்கு மட்டுமே தெரிந்த சில விஷயங்கள் இருக்கின்றன. அவை அப்படியே இருக்க நான் விட்டுவிடுகிறேன். மக்கள் சிலர் வாழ்க்கையின் தேவைளை குறித்து பேசுகிறார்கள். அவர்களது பேச்சுக்களை நான் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி செய்யாவிட்டால் நம் வாழ்வு மகிழ்ச்சியாக அமையாது. எதிர்மறையான எண்ணங்களை எப்போதும் நம்மிடத்தில் வைத்திருக்க கூடாது' என்று கூறியுள்ளார்.

கொரோனா மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த சில வாரங்களாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

இதையொட்டி, 2 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தலைவர்கள், பிரபலங்கள் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் கூறி வருகின்றனர்.

First published:

Tags: Lata Mangeshkar