பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

இந்த பாரத ரத்னா விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. 

Web Desk | news18
Updated: August 8, 2019, 8:40 AM IST
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
பிரணாப் முகர்ஜி
Web Desk | news18
Updated: August 8, 2019, 8:40 AM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட மூவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா இன்று வழங்கப்படுகிறது.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்தார்.

இதேபோன்று இசை மேதை பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகிய இருவருக்கும் மறைவுக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில்


பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

இதே போல், பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகிய இருவரின் உறவினர்களிடமும் பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த பாரத ரத்னா விருது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது. இதுவரை மொத்தம் 45 பேர்இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் படிக்க...
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...