Home /News /national /

கேரளாவில் பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்ற ராகுல்காந்தி… துடுப்புகளை வீசி அசத்தல்

கேரளாவில் பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்ற ராகுல்காந்தி… துடுப்புகளை வீசி அசத்தல்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்தியா ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பிரசாரம், கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவு பெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்று துடுப்புகளை வீசினார். இதுதொடர்பான வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது.

    காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கடந்த 2019, ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இருப்பினும் அவர் ஏற்கவில்லை.

    தற்போது கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    சோனியா காந்தியை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

    இந்தியா ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த பிரசாரம், கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி பகுதியில் தனது நடைபயணத்தை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி தற்போது  கேரளாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.



    அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் இன்று ஆலப்புழையின் புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாரம்பரிய பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்றார்.





    பலத்த ஆரவாரங்ளுக்கு இடையே, ராகுல் காந்தி படகில் துடுப்பை வீசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Rahul gandhi

    அடுத்த செய்தி