ஹோம் /நியூஸ் /இந்தியா /

“இந்த விஷயத்தில் பாஜகதான் என் குரு” - பளீரென பேசிய ராகுல்காந்தி

“இந்த விஷயத்தில் பாஜகதான் என் குரு” - பளீரென பேசிய ராகுல்காந்தி

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினம்தான் - ராகுல் காந்தி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

அதிகாரத்தில் இருக்கும் போது எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை கற்றுக்கொடுப்பதில் பாஜகதான் தனக்கு குரு என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் தொடங்கியபோது அதை ஒரு சாதாரண நடைப்பயணமாகத் தான் நினைத்ததாகவும், ஆனால் இந்த யாத்திரை மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை புரிந்துகொள்ள பாஜகவினரின் கடுமையான தாக்குதல்கள் உதவியாக இருப்பதாக கூறினார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது கடினம்தான் என கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் மாற்றுப்பார்வையுடன் மக்களிடம் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை மக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டில் பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய அடித்தளம் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், அதிகாரத்தில் இருக்கும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என கற்றுக்கொடுப்பதில் பாஜகவை தனது குருவாக எண்ணுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

First published:

Tags: BJP, Congress, Rahul gandhi