இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைத்தொடர்ந்து, ராஜஸ்தான், ஹரியானாவைத் தொடர்ந்து யாத்திரை டெல்லியை அடைந்திருக்கிறது. இந்த யாத்திரையில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று கமல்ஹாசன் டெல்லிக்கு சென்று பாதயாத்திரையில் பங்கேற்றார். ITO பகுதியில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற கமல்ஹாசன் அங்கு ராகுலை சந்தித்து கைகுலுக்கினார். பின்னர் பேசிய கமல்ஹாசன், இந்தியன் என்ற உணர்வால் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றதாக கூறினார். மேலும் கமல், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு நெருக்கடி ஏற்பட்டால் வீதியில் வந்து போராடுவேன் என்று கூறினார்.
தொடர்ந்து, செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, பாஜக, நாட்டில் உள்ள மத ரீதியிலான வேறுபாடுகளை ஆயுதங்களாக பயன்படுத்தி, நாட்டில் வெறுப்புணர்வை அதிக அளவில் பரப்பி வருகிறது. நாட்டின் வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களை மறைக்கவே பாஜக மத வெறுப்பை தூண்டி பரப்பி வருகிறது.
இதையும் படிங்க: 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணியா ? - ராகுல் மேடையில் கமல் கொடுத்த விளக்கம்!
படித்த இளம் பட்டதாரிகள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக பக்கோடா விற்கும் நிலைமையை உருவாக்கியதுதான் மோடி அரசின் சாதனை. எனது பிம்பத்தை உடைக்க பாஜக கோடி கோடியாக செலவழித்து அவதூறு பரப்புகிறு. ஆனால், இந்த ஒரு மாத யாத்திரை நாட்டு மக்களுக்கு உண்மையை உணர்த்தியுள்ளது. ஒற்றுமை யாத்திரையில் பசுக்கள், பன்றிகள், நாய்கள் கூட வந்ததாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஆனால் யாரும் அவைக்கு தீங்கு செய்யவில்லை என குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Kamalhaasan, Rahul gandhi