ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரையில் சோனியாகாந்தி பங்கேற்பு - பூரண கும்ப மரியாதை அளித்த தொண்டர்கள்

காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரையில் சோனியாகாந்தி பங்கேற்பு - பூரண கும்ப மரியாதை அளித்த தொண்டர்கள்

சோனியா காந்தி

சோனியா காந்தி

காங்கிரஸ் தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார்

  விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் செப்டம்பர் 7 ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்து. கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை, கேரளா வழியாக கர்நாடகாவை அடைந்தது.

  தமிழகம் மற்றும் கேரளாவில் ராகுல்காந்தி தலைமையில் யாத்திரை நடைபெற்ற நிலையில், கர்நாடக மாநிலம் மாண்ட்யாவில் தொடங்கிய யாத்திரையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். காங்கிரஸ் தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

  Read More: பிலாஸ்பூர் எய்ம்ஸ் பசுமை மருத்துவமனையாக அறியப்படும் - பிரதமர் மோடி பெருமிதம்

  யாத்திரையில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகள் சிலரும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ராகுல் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Congress, Sonia Gandhi