ஹோம் /நியூஸ் /இந்தியா /

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து: ஜனவரி இறுதியில் கடைகளில் கிடைக்கும்.. விலை எவ்வளவு தெரியுமா?

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து: ஜனவரி இறுதியில் கடைகளில் கிடைக்கும்.. விலை எவ்வளவு தெரியுமா?

நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து

நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து

மூக்கின் வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் தடுப்பு மருந்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

கொரோனா தொற்றிற்கு எதிரான உலகின் முதல் நாசி வழி தடுப்பு மருந்து இந்தியாவில் ஜனவரி இறுதியில் தனியார் மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் 18 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு மூக்கின் வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் தடுப்பு மருந்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

உலகின் முதல் நாசி வழி தடுப்பு மருந்தான இன்கோவேக் ஜனவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், ஒரு டோஸ் தடுப்பு மருந்து தனியார் மையங்களில் 800 ரூபாய்க்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடனும், அரசு மருத்துவமனைகளில் 325 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு டோசில் 4 சொட்டுகள் இருக்கும் எனவும், ஒருவருக்கு 2 சொட்டுகள் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷீடு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த தடுப்பு மருந்தை பூஸ்டர் டோசாக எடுத்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus, Covid-19 vaccine