மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் வென்ற ஆம் ஆத்மி கட்சி!

டெல்லியில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி இருந்த போதிலும் அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் வென்ற ஆம் ஆத்மி கட்சி!
பக்வந்த் மான்
  • News18
  • Last Updated: May 24, 2019, 11:18 AM IST
  • Share this:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜர்வால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பக்வந்த் மான் மட்டுமே ஆம் ஆத்மி சார்பில் வெற்றிபெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கேவல் சிங் தில்லோன்-ஐ தோற்கடித்த பக்வந்த் மான் 1,10,211 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தார்.


அதன் படி பஞ்சாப்பில் இருக்கும் 13 மக்களவைத் தொகுதிகளில் 8-ஐ காங்கிரஸ் கட்சியும், 2 இடங்களை பாஜகவும், 2 தொகுதிகளை ஷிரோமணி அகலி தல் கட்சியும், 1 இடத்தை ஆம் ஆம்தி கட்சியும் கைப்பற்றியுள்ளன.

2014-ம் ஆண்டும் இதே மக்களவைத் தொகுதியில் பக்வந்த் மான் போட்டியிட்டு வெற்றிபெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி இருந்த போதிலும் அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. மறுபக்கம் டெல்லியின் 7 மக்களவைத் தொகுதியையும் பாஜக கைப்பற்றியுள்ளது.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க மறுத்தது ஆம் ஆத்மியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

மேலும் பார்க்க:
First published: May 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்