Home /News /national /

பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் பக்வந்த் மான்

பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் பக்வந்த் மான்

பக்வந்த் மான்

பக்வந்த் மான்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

  • News18
  • Last Updated :
    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பக்வந்த் மான் இன்று ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். 

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மொஹாலியில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள பக்வந்த் மான் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    கூட்டத்தில் உரையாற்றிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்டிகரில் தங்கிவிடாமல் தங்கள் தொகுதிகளுக்கு சென்று, சமூகப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், ஆணவ மனப்பான்மையுடன் செயல்படக் ’கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் இன்று காலை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை சந்தித்த பக்வந்த் மான், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். வரும் 16ம் தேதி புதிய அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. இதனிடையே, ஆளுநரை சந்தித்த சரன்ஜித் சிங் சன்னி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை வழங்கினார்.

    Also read... 4 மாநில தேர்தல் வெற்றி; குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

    இதையடுத்து சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்தார். இதேபோல் உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில், பாஜக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

     
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Punjab

    அடுத்த செய்தி