Home /News /national /

இன்று பவானிபூர் இடைத்தேர்தல் முடிவு.. மம்தா பானர்ஜி வெற்றி பெறுவாரா?

இன்று பவானிபூர் இடைத்தேர்தல் முடிவு.. மம்தா பானர்ஜி வெற்றி பெறுவாரா?

Mamata vs tibrewal

Mamata vs tibrewal

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கருதி, ஒரு வேட்பாளராக நான் கேட்பதெல்லாம், சட்ட அமலாக்க துறைகள் முன்னெச்சரிக்கையாக அதிகபட்ச தடுப்பு நடவடிக்கைள் எடுக்க வேண்டும்

மேற்குவங்கத்தின் பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில், வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் திப்ரேவால் கொல்கதா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அசத்தலான வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவர் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக தொடர முடியும்.

இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் தான் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது, இதில் மம்தா பானர்ஜியும், அவரை எதிர்த்து பாஜக பெண் வேட்பாளரான பிரியங்கா திப்ரேவாலும் போட்டியிட்டனர். கடந்த 30ம் தேதி பவானிபூர் மற்றும் ஒடிசாவில் உள்ள பிப்பிலி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.

Also Read:  சமந்தா – நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகர் நாகார்ஜூனா உருக்கம்!

இதனிடையே பாஜக பெண் வேட்பாளரான திப்ரேவால், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில், தேர்தல் முடிவு வெளியாகும் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதை தடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். கொல்கத்தா போலீசார் வன்முறை சம்பவங்களை தீவிரமாக தடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

Also Read:  டாஸ்மாக் பார் எடுத்துத்தருவதாக திமுக பிரமுகர் மோசடி.. கொலை மிரட்டல்.. மகளிரணி நிர்வாகி புகார்!

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கருதி, ஒரு வேட்பாளராக நான் கேட்பதெல்லாம், சட்ட அமலாக்க துறைகள் முன்னெச்சரிக்கையாக அதிகபட்ச தடுப்பு நடவடிக்கைள் எடுக்க வேண்டும். எந்த உயிரும் பறிபோகக் கூடாது, எந்த பெண்ணும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகக் கூடாது, யாரும் வீடில்லாதவர்களாக மாறிவிடக் கூடாது, தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருப்பினும், நாம் வாழும் சூழல் மாறிவிடக்கூடாது, கலவரங்களை தடுக்க வேண்டும்!” இவ்வாறு திப்ரேவால் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Arun
First published:

Tags: BJP, TMC

அடுத்த செய்தி