ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிஎஃப்.7 வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்...ஆனால் இதெல்லாம் பாலோ பண்ணுங்க...

பிஎஃப்.7 வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்...ஆனால் இதெல்லாம் பாலோ பண்ணுங்க...

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

Coronavirus : ஒமைக்கிரான் வைரஸின் ஒரு வகை திரிபுதான் பி.எஃப் 7 வகை வைரஸ். இரண்டிற்கு பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பிஎஃப்.7 வகை வைரஸ் குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை என மூத்த அறிவியலாளர் ராகேஷ் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த அச்சம் ஏதுமின்றி பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது சீனாவில் புதிதாக பரவ ஆரம்பித்துள்ள பிஎஃப். 7 வகை கொரோனாவால் மக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அத்துடன், பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த புதிய வகை கொரோனா குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனிடிக் மற்றும் சொசைட்டியின் இயக்குனரும், மூத்த அறிவியலாளருமான ராகேஷ் மிஸ்ரா பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ஒமைக்ரான் வைரஸின் ஒரு வகை திரிபுதான் பி.எஃப் 7 வகை வைரஸ். இரண்டிற்கு பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. நம்மில் பெரும்பாலானோர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தோம். ஆகவே பி.எஃப் 7 வகை வைரஸ் தீவிரம் குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.

Also Read:  2019 கொரோனா வைரஸை விட 4.4 மடங்கு வீரியம் கொண்ட BF.7 திரிபு வைரஸ் - புதிய ஆய்வில் தகவல்

அத்துடன் இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி காரணமாக கொரோனாவுக்கு எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்பு சக்தி இந்தியர்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், “ஆனாலும் கூட முகக்கவசம் அணிவது, தேவையற்ற கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Corona, CoronaVirus, Covid-19