ஹோம் /நியூஸ் /இந்தியா /

வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் அழைப்பை அட்டென்ட் செய்தால் இவ்வளவு பெரிய சிக்கலா

வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் அழைப்பை அட்டென்ட் செய்தால் இவ்வளவு பெரிய சிக்கலா

மாதிரி படம்

மாதிரி படம்

சைபர் கிரிமினல்கள் நாளுக்கு நாள் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Haryana, India

  சைபர் கிரிமினல்கள் நாளுக்கு நாள் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். இவர்களின் பலவித மோசடிகள் பற்றி அதிகாரிகள் உடனுக்குடன் எச்சரித்து வந்தாலும் பல மக்கள் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் மோசடி நபர்களின் சதி வலையில் விழுந்து பல நாள் உழைப்பில் சேர்த்து வைத்த பணத்தை நொடியில் இழந்து விடுகிறார்கள்.

  இந்த நிலையில் சைபர் கிரிமினல்களிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க தெரியாத வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். அப்படியே பேசினாலும் தனிப்பட்ட தகவல்கள் பகிர வேண்டாம் மற்றும் நிதி உதவி கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று ஹரியானா காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

  சமீபத்தில் ஹரியானா காவல்துறை செய்தி தொடர்பாளர் நிருபர்களிடம் பேசுகையில், சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற பல ட்ரிக்ஸ்களை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். இப்படிப்பட்ட புதிய ட்ரிக்ஸில் வெளிநாட்டில் வசிக்கும் அல்லது படிக்கும் உறவினர்களை கொண்டவர்களை மோசடி நபர்கள் குறிவைக்கின்றனர் என்று குறிப்பிட்டு உள்ளார். பல இந்தியர்கள் தங்கள் வேலைக்காகவோ அல்லது கல்விக்காகவோ வெளிநாடுகளில் வசிக்கிறார்கள், சைபர் கிரிமினல்கள் இப்போது இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

  இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற ஒரு மோசடி சம்பவம் பற்றியும் விளக்கி உள்ளார். பஞ்ச்குலாவில் வசிக்கும் பிரேம் சந்த் மற்றும் அவரது மனைவிக்கு தெரியாத வெளிநாட்டு நம்பரிலிருந்து ஒரு கால் வந்துள்ளது. இவர்களது உறவினரின் இளவயது மகன் ஒருவர் கனடாவில் படித்து வருகிறார். கால் வந்த நம்பரில் எதிர்முனையில் பேசிய நபர் தன்னை அவர்களது உறவினர் மகன் என்று குறிப்பிட்டு தனக்கு அவசரமாக ஒரு உதவி தேவைப்படுவதாக கூறி பதற்றமுடன் பேசியுள்ளார்.

  Read More: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

  இதனையடுத்து என்ன பிரச்சனை, என்ன உதவி வேண்டும் என்று பிரேம் சந்த் கேட்க, வேறுஒரு நபருடன் சண்டை ஏற்பட்டதாகவும் அதில் அந்த நபர் காயமடைந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். தன்னால் காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் தன் மீது கனடா காவல்துறை நடவடிக்கை எடுக்கும். எனவே அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார்.

  இதனை நம்பி 3 தவணைகளில் ரூ.7.5 லட்சம் பணத்தை எதிர்முனையில் உறவினர் மகன் என்று பேசிய அந்த நபர் கொடுத்த அக்கவுண்டிற்கு பிரேம் சந்த் அனுப்பி உள்ளார். ஆனால் இதன் பிறகு அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டு 1930 என்ற எண்ணிற்கு புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக பரிவர்த்தனையை முடக்கி ரூ. 2.5 லட்சம் பணம் மீட்கப்பட்டது என கூறினார். பொதுவாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களே புது நம்பரில் இருந்தது பேசினால் அவர் தான் என்பதை கண்டறிய முடியமால் நம்மில் பெரும்பாலானோர் திணறுவோம்.

  இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வேறு ஒரு நம்பரில் இருந்து இன்னார் தான் பேசுகிறேன் என்று மக்களை எளிதில் ஏமாற்ற முடியும் என்பதால் பயனுள்ள டெக்னிக்காக இதை உபயோகிக்கின்றனர் சைபர் கிரிமினல்கள். எனவே புதிய வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் அழைப்பில் உங்களுக்கு வேண்டிய நபர் தான் பேசுகிறாரா அல்லது பேசும் நபர் உண்மையானவரா என்பதை பலமுறை சரி பார்க்காமல் பணம் அனுப்பும் விஷயங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று போலீசார் மக்களை எச்சரித்து உள்ளனர்.

  குழந்தைகள் மற்றும் உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பது இன்றைய காலக்கட்டத்தில் சகஜம் என்ற நிலையில், அவர்களுக்கு அங்கே ஒரு பிரச்சனை என்ற பயத்தை காட்டி சைபர் குற்றவாளிகள் தங்கள் மோசடிகளில் வெற்றி பெறுகிறார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Cyber crime