அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக
சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் 26 மணிநேரத்தில் பறந்து வந்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 67 வயதான பெண் அமெரிக்காவின் போர்ட்லாந்து பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு இருதய பாதிப்பு உள்ள நிலையில், இந்த பாதிப்பு தீவிரம் அடைந்து கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர் தனது சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வர திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவரை ICATT நிறுவனத்தின் சேலேஞ்சர் 605 ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் இந்திய கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விமானத்திலேயே இவருக்கு ஐசியு மருத்துவ வசதி பொருத்தப்பட்டு பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விமானத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மூன்று மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் துணைக்கு உடன் வந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிறு அன்று அமெரிக்காவில் புறப்பட்ட விமானம் சுமார் ஏழரை மணி நேரத்தில் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகருக்கு வந்து சேர்ந்தது. அங்கு விமானத்திற்கு எரிவாயு நிரப்ப சிறிது நேரம் ஹால்ட்டில் இருந்தது. பின்னர், அங்கிருந்து புறப்பட்ட விமானம் ஆறு மணி நேரத்தில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு வந்து சேர்ந்தது.
இஸ்தான்புல்லில் விமானம் மற்றும் விமானிகள் குழு மாற்றப்பட்டு, அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட விமானம் செவ்வாய் கிழமை அதிகாலை வந்து சேர்ந்தது. சிகிச்சைக்காக வந்த பெண் அமெரிக்காவில் புறப்பட்டு 26 மணி நேரத்தில் சென்னை வந்து சேர்ந்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க:
ஒரே வருடத்தில் இந்தியாவை துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 1 லட்சம் இந்தியர்கள்!
இந்த பெண் அமெரிக்காவில் வசித்து வந்தாலும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என்பதும், அமெரிக்காவில் சிகிச்சைக்கான காலம், செலவுகள் அதிகமாக உள்ளதால் அங்கு சிகிச்சை பெற அவர் விரும்பவில்லை. மாறாக அமெரிக்காவை விட சென்னையில் சிகிச்சை பெறுவதே நமக்கு சிறந்தது என முடிவெடுத்த அந்த பெண், இந்த ஏர் ஆம்புலன்ஸ் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். இந்த பயணத்திற்கான செலவு தோராயமாக ரூ.1 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.