அம்மாவும் தம்பியும் தூங்குறாங்கன்னு நினைச்சேன்... அழுகிய சடலங்களுடன் 2 நாள்கள் இருந்த பெங்களூரு பெண்

மாதிரிப்படம்

பெங்களூருவில் நடுத்தர வயது பெண் ஒருவர் தாய் மற்றும் சகோதரனின் சடலத்துடன் இரண்டு நாள்கள் தங்கியிருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 • Share this:
  கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 45 வயதான ஹரீஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரியுடம் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தார். ஹரீஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் உள்ளூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

  இதனையடுத்து காவல்துறையினர் நேற்று மதியம் ஹரீஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டை உடைத்துக்கொண்டு காவலர்கள் உள்ளே சென்றுள்ளனர். வீட்டில் இரண்டு சடலங்கள் இருந்துள்ளது. விசாரணையில் அது ஹரீஷ் மற்றும் அவரது தாயார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிருடன் இருந்துள்ளார்.

  மேலும் படிக்க: இணையத்தை கலங்கடித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் புகைப்படம்

  காவலர்கள் கூறுகையில், “ஹரீஷ் வீட்டில் துர்நாற்றும் வீசுவதாக அவரது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பிரவீன் என்பவர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தோம். கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்தோம். வீட்டில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் இருந்தது. ஜன்னலுக்கு பக்கத்தில் ஒரு ஆண் சடலம். மற்றொரு அறையில் ஒரு சடலம் இருந்தது.

  இரண்டு சடலங்களுடன் ஒரு பெண்ணும் வீட்டில் இருந்தார். அவர் பெயர் ஸ்ரீலட்சுமி அவர் ஹரீஷ் சகோதரி. சற்று மனநலம் பாதித்தவராக இருக்கிறார். தாய் மற்றும் சகோதரன் இறந்தது கூட அந்தப்பெண்ணுக்கு தெரியவில்லை. ஹரீஷ் ஏப்ரல் 22-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

  தனது தாய்க்கு கடந்த சில தினங்களுக்கு  முன் உடல்நலம் சரியில்லை என ஸ்ரீலட்சுமி விசாரணையில் கூறினார். ஹரீஷ் ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்ததாகவும் அவருக்கு எந்தப்பதிலும் கிடைக்கவில்லை என அந்தப்பெண் கூறினார். மேலும் அவர் இரண்டு நாள்களாக சாப்பிடவில்லை என்றும் தாய் மற்றும் சகோதரன் இருவரும் உறங்கிக்கொண்டிருப்பதாக நினைத்தேன் என்றும் அவர் கூறினார். அந்தப்பெண் கூறியதையடுத்து ஹரீஷ் போனை ஆய்வு செய்ததில் அவர் மே 10-ம் தேதி 108-க்கு பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.” எனத் தெரிவித்தள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  Published by:Ramprasath H
  First published: