ஊரடங்கால் வேலையிழந்த கணவர் பாலியல் தொழிலாளியாக மாறியதை அறிந்ததால் விவாகரத்து கேட்ட மனைவி!

மாதிரி படம்

கணவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

  • Share this:
பெங்களூருவைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது அலுவலகத்தில் பணியாற்றிய சக நண்பர் ஒருவரை 2017ம் ஆண்டு தொடங்கி 2 ஆண்டுகளாக காதலித்து 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

27 வயதான அந்த நபர் கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் காரணமாக வேலையை இழந்துள்ளார். இதனையடுத்து வேறு வேலைக்காக தேடி வந்துள்ளார்.

ஒரு சில மாதங்கள் கழித்து கணவரின் நடவடிக்கைகளில் கடுமையான மாற்றத்தை பார்த்த அவருடைய மனைவி, தனது கணவர் எதையோ தன்னிடம் மறைக்கிறார் என்பதை உணர்ந்துள்ளார். நீண்ட காலமாகவே அவருடைய நடவடிக்கை மிக விநோதமாக , மொபைலிலும், லேப்டாப்பிலும் எதையோ மறைத்து வைத்து பார்த்துக்கொண்டே இருந்ததை பார்த்ததால் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கணவரின் ரகசியங்களை தெரிந்துகொள்ளும் வகையில் தனது தம்பியின் உதவியை நாடியிருக்கிறார் அப்பெண். கணவரின் லேப்டாப்பில் ரகசிய பாஸ்வோர்டை கிராக் செய்து உள் நுழைந்து பார்த்த போது அப்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவருடைய கணவர் பல பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் படங்கள் அதில் இருந்துள்ளன.

ஆத்திரம் அடைந்த மனைவி, கணவரிடம் இது குறித்து கேட்டதற்கு ஆரம்பத்தில் அது தான் இல்லை என மறுத்திருக்கிறார். இருப்பினும் பின்னர் தான் மனைவிக்கு தனது கணவர் குறித்த உண்மைகள் தெரியவந்தது.

வேலையை இழந்த அவருடைய கணவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் ஒரு வாடிக்கையாளருக்கு 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவருக்கு பல பெண் வாடிக்கையாளர்கள் பெங்களூருவில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மகளிர் ஆலோசகரிடம் இருவரும் சென்றுள்ளனர். அந்த ஆலோசகர் கணவரிடம் பேசியிருக்கிறார். அப்போது தான் அவருடைய ரகசிய வேலை பற்றி கூறியிருக்கிறார் அவர். தனக்கு அந்த வேலை மிகவும் பிடித்துள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் தான் மனைவியை காதலிப்பதாகவும், அவரிடம் இருந்து பிரிய விரும்பவில்லை, ஆனால் இந்த வேலையை விட்டுவிடுவதாகவும் கூறியிருக்கிறார்.

இருப்பினும் கணவரின் செயலை விரும்பாத மனைவி, கணவரிடம் இருந்து பிரிந்து விட விரும்பியதால் இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து பெறுவதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
Published by:Arun
First published: