டெலிவரி பாய் தவறாக நடக்க முயற்சி என பெண் புகார்... கூப்பன் அனுப்பி ‘சாரி’ சொல்லிய ஸ்விக்கி...!

ஸ்விக்கி நிறுவனத்தை தொடர்பு கொண்டு அப்பெண் புகார் அளித்துள்ளார். எனினும், அப்பெண்ணிடம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி மன்னிப்பு கோரி ஒற்றை வார்த்தையில் இந்த பிரச்னையை முடித்துள்ளது.

news18
Updated: April 1, 2019, 6:08 PM IST
டெலிவரி பாய் தவறாக நடக்க முயற்சி என பெண் புகார்... கூப்பன் அனுப்பி ‘சாரி’ சொல்லிய ஸ்விக்கி...!
ஸ்விக்கி
news18
Updated: April 1, 2019, 6:08 PM IST
உணவு டெலிவரி செய்ய வந்த நபர் தவறாக நடக்க முயன்றதாக பெண் புகார் கூறிய நிலையில், 200 ரூபாய் கூப்பனை அனுப்பி ஸ்விக்கி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்விக்கி ஆப் வழியாக உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை டெலிவரி கொடுக்க வந்த நபர், தவறான முறையில் நடந்ததாக அப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஸ்விக்கி நிறுவனத்தை தொடர்பு கொண்டு அப்பெண் புகார் அளித்துள்ளார். எனினும், அப்பெண்ணிடம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி மன்னிப்பு கோரி ஒற்றை வார்த்தையில் இந்த பிரச்னையை முடித்துள்ளது.

மேலும், ரூ.200 மதிப்புள்ள கூப்பன் ஒன்றையும் அப்பெண்ணுக்கு இலவசமாக ஸ்விக்கி வழங்கியுள்ளது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, பின்னர் இவ்விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Also...

வரதட்சணை கொடுமை... பட்டினி போட்டு பெண்ணை கொலை செய்த கணவர், மாமியார்

உணவு சரியில்லை என்று வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மோடிக்கு எதிராக போட்டி!
Loading...
Also See...ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...