பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கர்நாடக புதிய திட்டம்! கட்டுமான நிறுவனங்கள் அதிருப்தி

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு திட்டங்களின் மூலம் பெங்களூரு தேவையான தண்ணீர் பெறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கர்நாடக புதிய திட்டம்! கட்டுமான நிறுவனங்கள் அதிருப்தி
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பெங்களூருவில் அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கு அனுமதியில்லை என்ற முன்மொழிவை கர்நாடக மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா முன்மொழிந்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. சென்னையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. அதேபோல, கர்நாடாக மாநிலம் பெங்களூருவும் அதிகப்படியான, நெருக்கடியால் திணறிவருகிறது.

இந்தநிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா, வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பெங்களூருவில் அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கு அனுமதியில்லை’ என்ற கருத்தை முன்மொழிந்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘பெங்களூரு நகரத்தில் ஏராளமான அப்பார்ட்மெண்ட்கள் இருக்கின்றன. அந்த அப்பார்ட்மெண்டை விற்கும்போது, அடிப்படைத் தேவையான குடிநீருக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.


தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக, தனியார் லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டிய அவசியம் உள்ளது. அது, அவர்களுக்கு தோல் வியாதிகள் வருவதற்கு காரணமாக அமைகிறது. அதனால், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பார்ட்மெண்ட்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்ற கருத்தை முன்மொழிகிறேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு திட்டங்களின் மூலம் பெங்களூரு தேவையான தண்ணீர் பெறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்டுமான நிறுவனத்தின் அதிபர் ரமணி சாஸ்திரி, ‘பெங்களூரு, அதன் தேவைக்கு அதிகமாகவே வளர்ந்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தை திட்ட அதிகாரிகள்தான் முடிவு செய்கின்றனர். கட்டுமானத்துறையினர், அவர்களுடைய பணியைத் தாண்டி எதையும் செய்வதில்லை.

பெங்களூரு குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாரியம், கர்நாடக மின்சார வாரியத்தின் அனுமதி வாங்கிதான் அப்பார்ட்மெண்ட் கட்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். நீங்கள், அவர்களது திறனை அதிகரிக்கவேண்டும். அவர்கள், இந்த திட்டத்தை செய்தால், அது எதிர்மறையாக அமையும்’என்று தெரிவித்தார்.Also see:

First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading