Home /News /national /

தங்க செயினை விழுங்கிய திருடன் - பத்திரமாக மீட்ட போலீசார்!

தங்க செயினை விழுங்கிய திருடன் - பத்திரமாக மீட்ட போலீசார்!

செயினை விழுங்கிய திருடன்

செயினை விழுங்கிய திருடன்

திருடனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை சங்கிலி பற்றி போலீசாருக்கு தெரியாது. அங்கு எக்ஸ்ரே, ஸ்கேனிங் செய்த போது வயிற்றில் தங்கச்செயின் இருப்பது தெரியவந்தது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
பெங்களூரில் திருடனுக்கு மலமிளக்கி, வாழைப்பழமும் கொடுக்கப்பட்டு அவர் விழுங்கிய தங்கச் சங்கிலியை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிட்டி மார்க்கெட்டின் எம்.டி.வீதியில் வசிக்கும் ஹேமா என்பவர், நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் ஹேமா கழுத்திலிருந்த தங்கச்செயினை பறிக்க முயற்சித்தனர். ஆனால் அந்தப் பெண் சங்கிலியை எளிதில் விட்டுவிடவில்லை, திருடர்கள் அந்த ஜெயினை பறிக்க முயன்றபோது ஹேமா அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டார். கடைசியாக அவர்களில் ஒருவன் அந்த பெண்ணிடம் இருந்து 70 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.

Also Read:  கோவையில் பார்வைக்கு வைக்கப்பட்ட இனோவா கார்: செல்பி எடுத்து மகிழ்ந்த பா.ஜ.க தொண்டர்கள்

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த ஹேமா, வலியால் துடித்தாலும் அருகில் உள்ள பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட தொடங்கினார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக விரைந்து உதவிக்கு வந்ததால் இருவர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் அங்கு இருந்தவர்கள் ஒப்படைத்தனர். ஆனால் அவரிடமிருந்து சங்கிலியை மீட்டெடுக்க முடியவில்லை. திருடன் பிடிபடுவதற்கு முன்பே தங்கச் சங்கிலியை விழுங்கிவிட்டது பின்னர் தெரியவந்துள்ளது.

Also Read: கருணாநிதி பரம்பரையில் கால்பந்து வீரர்- கலக்கத் தயாராகும் உதயநிதி வாரிசு

அந்த திருடனை கேஆர் மார்க்கெட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவன் பெயர் விஜய் என்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து இன்ஸ்பெக்டர் பிஜி குமாரசாமி அந்த திருடனின் காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருடனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை சங்கிலி பற்றி போலீசாருக்கு தெரியாது. அங்கு எக்ஸ்ரே, ஸ்கேனிங் செய்த போது விஜய்யின் வயிற்றில் தங்கச்செயின் இருப்பது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் பொதுமக்களிடம் சிக்கியதால், பயந்து செயினை வாயில் போட்டு விழுங்கியதை திருடன் ஒப்புக்கொண்டார். அவரது வயிற்றிலிருந்து, செயினை வெளியை எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்தனர். உடனடியாக அவருக்கு எனிமா மற்றும் வாழைப்பழம் கொடுத்தனர். பின்னர் செயின் மலத்தில் வெளியே வந்ததை தொடர்ந்து திருடன் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் விஜய்யிடம் அவனது நன்பர்கள் குறித்த விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். செயினை திருடி விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த கருத்துக்களை நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அந்த திருடனை வெளியில் விடக்கூடாது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Bengaluru police, Chain Snatching, Crime | குற்றச் செய்திகள், Gold, Gold Theft

அடுத்த செய்தி