முகப்பு /செய்தி /இந்தியா / இன்ஸ்டாவில் வலை.. OYO-வுக்கு அழைத்து வலுக்கட்டாய உறவு.. பெண்களை வீடியோ எடுத்து இளைஞர் செய்த காரியம்..!

இன்ஸ்டாவில் வலை.. OYO-வுக்கு அழைத்து வலுக்கட்டாய உறவு.. பெண்களை வீடியோ எடுத்து இளைஞர் செய்த காரியம்..!

பெங்களூருவில் கைதான டெல்லி பிரசாத்

பெங்களூருவில் கைதான டெல்லி பிரசாத்

கைதான நபர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இளம் பெண்களை குறிவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும், சுமார் 13 இளம் பெண்களின் வீடியோக்கள் இவரிடம் இருந்ததும் விசாரணையில் அம்பலமானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த இளைஞர் டில்லி பிரசாத். தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்த டில்லி இன்ஸ்டாகிராமில் 5 போலி கணக்குகளை உருவாக்கி தன்னை பெண் போல அடையாளப்படுத்திக் கொண்டார்.

பின்னர் பல இளம் பெண்களை தேடி ரெக்வுஸ்ட் கொடுத்து நட்பாகி, சாட் செய்து பழகத் தொடங்கியுள்ளார். தான் ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக உள்ளேன். எனக்கு பல நிறுவனங்களிடம் தொடர்பு உள்ளது. உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என ஆசை வார்த்தை பேசி வலையில் சிக்க வைத்துள்ளார்.

அவரின் பேச்சை நம்பி பழகத் தொடங்கிய பெண்களை, நேரில் வந்து பார்க்குமாறு அழைத்துள்ளார். இதற்காக ஓயோ ஹேட்டல்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். ஹோட்டல்களுக்கு அவர்களை அழைத்து அங்கு அவர்களை கட்டாய பாலியல் உறவுக்கு ஆளாக்கி அதை வீடியோ எடுத்து வைத்து பிளாக் மெயில் செய்துள்ளார். பெரும்பாலும் இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்களை குறிவைத்து இந்த குற்றத்தை செய்துள்ளார். இவரை கைது செய்துள்ள பெங்களூரு காவல்துறையினர் செல்போன், லேப்டாப் போன்ற கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தை திருமணங்கள்.. ஒரே நாளில் 2,044 பேர் அதிரடி கைது...!

இவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இளம் பெண்களை குறிவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும், சுமார் 13 இளம் பெண்களின் வீடியோக்கள் இவரிடம் இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. இவர் மீது ஐடி சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.

First published:

Tags: Bengaluru, Crime News, Instagram, Karnataka, Sexual abuse