”மண்புழுவா... குமாரசாமியா... எடியூரப்பாவா...?” கேள்வியால் ஆசிரியருக்கு பதவி பறிப்பு

பிஜேபியின்  மாநில  தலைவரான எடியூரப்பா பல நிகழ்ச்சிகளில் தன்னை தானே விவசாயிகளின் நண்பன் என சொல்லிக் கொள்வார். குமாரசாமியும் அடிக்கடி தன்னை விவசயிகளின் தலைவன் என்று சொல்லிக் கொள்வதுண்டு.

news18
Updated: March 29, 2019, 5:03 PM IST
”மண்புழுவா... குமாரசாமியா... எடியூரப்பாவா...?” கேள்வியால் ஆசிரியருக்கு பதவி பறிப்பு
எடியூரப்பா
news18
Updated: March 29, 2019, 5:03 PM IST
பெங்களூரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் விவசாயிகளின் நண்பன் யார்? என்ற கேள்விக்கு புழுவா, முதலமைச்சர் குமாரசாமியா அல்லது பி.ஜே.பி தலைவர் எடியூரப்பாவா என்று கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியான மவுண்ட் கார்மெல் பள்ளியில் எட்டாம் வகுப்பிற்கான வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. அதில் விவசாயியின் நண்பன் யார் என்ற கேள்விக்கு புழு, முதலமைச்சர் குமாரசாமி, பிஜேபி தலைவர் எடியூரப்பா என மூன்று தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்வியானது இறுதி ஆண்டுத் தேர்வுக்காக கன்னட மொழித்தாளில் கேட்கப்பட்டுள்ளது. இந்த தாள் சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவியுள்ளது. தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கான பரபரப்பான சூழல் நிலவி வருவதால் நெட்டிசன்கள் இந்த கேள்வியை அரசியலாக்கி விவாதித்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.”வினாத்தாளானது பள்ளியின் நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே கேள்விகள் முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த வினாத்தாளை தயாரித்த ஆசிரியரே பொறுப்பு. அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டோம்” என பள்ளியின் பேராசிரியர் ராகவேந்திரன் ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளார்.

பிஜேபியின்  மாநில  தலைவரான எடியூரப்பா பல நிகழ்ச்சிகளில் தன்னை தானே விவசாயிகளின் நண்பன் என சொல்லிக் கொள்வார். குமாரசாமியும் அடிக்கடி தன்னை விவசயிகளின் தலைவன் என்று சொல்லிக் கொள்வதுண்டு.

Also See...
Loading...
First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...