கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரில் முதல்முறையாக தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
கர்நாடக தமிழர் வரலாற்றில் முதல்முறையாக பெங்களூருவிலுள்ள அல்சூர் தமிழ் சங்க வளாகத்தில் வரும் 25ஆம் தேதி தமிழ் புத்தகத் திருவிழா தொடங்குகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார். கர்நாடகத் தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து புத்தக திருவிழாவை நடத்துகின்றன.
இதுதொடர்பாக விழாக் குழுவினர் கூறுகையில், சங்ககாலம் முதல் நவீன காலம் வரையிலான இலக்கியப் படைப்புகள் அனைத்தும் கிடைக்கும். அனைத்து நூல்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி அரங்குகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும்; அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்’ என்றனர்.
மேலும், மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்பு சீட்டும் அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க; ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த கனிமொழி.. காங்கிரசிற்கு வலுசேர்க்கும் திமுக..?
அதுபோலவே, கர்நாடகத்தில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள், பதிப்பகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சிறந்த நூல் போட்டி நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் 6 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. திருவிழாவில், தமிழர்கள் விளையாடி மகிழ்ந்த தாயக் கட்டை, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கிச்சு கிச்சு தாம்பலம், ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய் போன்ற தமிழ் மரபு விளையாட்டுகள் 8 நாட்களுக்கு இடம்பெற்றிருக்கும் எனவும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.