ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெங்களூருவில் தொடங்கியது தமிழ் புத்தக திருவிழா; தமிழில் பேசி அசத்திய கர்நாடக எம்.எல்.ஏ

பெங்களூருவில் தொடங்கியது தமிழ் புத்தக திருவிழா; தமிழில் பேசி அசத்திய கர்நாடக எம்.எல்.ஏ

பெங்களூரு புத்தக திருவிழா

பெங்களூரு புத்தக திருவிழா

பெங்களூருவில் முதல்முறையாக நடைபெறும் தமிழ் புத்தக திருவிழாவை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

பெங்களூரு நகரில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு முதன்முறையாக அல்சூரில் உள்ள தமிழ் சங்கம் வளாகத்தில் இன்று தொடங்கி 8 நாட்களுக்கு தமிழ் புத்தக திருவிழா நடைபெறுகிறது. 25 புத்தக பதிப்பு நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். புத்தக திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் தமிழில் பேசிய சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத், “எனது தொகுதியில் அதிக தமிழர்கள் இருப்பதால் அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக அவர்களது தாய்மொழியில் பேசுவதற்காக நான் தமிழைக் கற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டார்.

மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, உலகம் முழுவதும் அறிவியல் மாநாட்டிற்கு செல்லும்போது நம் சாதனை குறித்து அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். தமிழ் தாய் மொழியில் கற்றதால் சாதனைகள் எளிதானது என்று கூறினார்.

இதையும் படிங்க;  பிரபலமான 10 அறிவியல் புத்தகங்கள் இதோ!!!

மாணவர்களிடையே தமிழை கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் திருவிழாவில பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தலா ரூ.100 மதிப்புள்ள புத்தக அன்பளிப்புச்சீட்டு அளிக்கப்படுகிறது. முதல் 20 மாணவர்களுக்கு அன்பளிப்புச்சீட்டை மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ரிஸ்வான் அர்சத் வழங்கினர்.

பெங்களூரு நகரில் முதன்முறையாக நடைபெறும் தமிழ் புத்தகத் திருவிழா மூலமாக தங்களுக்கு விரும்பிய தமிழ் புத்தகங்களை வாங்க மிகவும் பயனுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Bengaluru