பெங்களூரின் புகழ்பெற்ற தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாலையில் சரமாரியாக கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரின் புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இரு பிரிவினராக கையில், பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்வதும், இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்வதும் என பதைபதைக்கும் வகையில் சற்றே ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொள்கின்றனர்.
அப்போது ஒரு தரப்பு மாணவிகள் கையில் இருக்கும் மட்டையை பிடுங்க முயற்சிக்க, மீண்டும் சண்டை ஆக்ரோஷமாக அந்த மாணவிகள் மீண்டும் சரமாரியாக தாக்கிக்கொள்கின்றனர். மேலும், அந்த வீடியோவில், இரு மாணவிகள் படிக்கட்டில் இருந்து விழுகின்றனர். அதில் ஒரு மாணவி இரும்பு கிரில்லில் வசமாக தள்ளிவிடப்படுகிறார். இதில், அவரது மூக்கு உடைந்து இரத்தம் கொட்டுகிறது. அப்போது, அவரது காதலன் வந்து அவரை பாதுகாக்கிறார் என அந்த பரபரக்கிறது அந்த வீடியோ.
எனினும், இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை. இந்த மோதல் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பதும் சரியாக தெரியவில்லை. இதுதொடர்பாக பெங்களூர் அசோக்நகர் காவல்நிலையத்தில் கேட்டபோது, அவர்கள் இந்த சம்பவம் குறித்து எதுவும் தெரியவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
An incident of girl students' of a reputed school in #Bengaluru indulging in street fighting in full public view went viral on Wednesday. pic.twitter.com/JtdQVcbSzH
சம்மந்தப்பட்ட அந்த பள்ளி நிர்வாகமும் இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்தவொரு புகாரும், விளக்கமும் அளிக்கவில்லை. எனினும், கிடைத்த தகவலின் படி, காதலனுக்காக இருதரப்பு மாணவிகள் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச்சென்று வந்துள்ளார். பின்னர், இந்த விவகாரம் காதலிக்கு தெரியவரவே, காதலனுடன் வெளியே சென்று வந்த மாணவியை சாலையில் வைத்து சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, அவர் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.