பெங்களூரு நகரில் இன்று வானத்தில் இருந்து திடீரென பயங்கர சத்தமும், லேசான நில அதிர்வும் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் ஹெம்மிகேபுரா, கென்கரி, ஞானபாரதி, ராஜேஸ்வரி நகர், கஜாலிபுரா போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள், வானத்தில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து லேசான நில அதிர்வையும் உணர்ந்ததாக பீதியுடன் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் சத்தம் எங்கிருந்து வந்தது என தெரியாத நிலையில் இன்று காலை 11.50 மணியில் இருந்து 12.15 வரையில் பல பகுதிகளில் இந்த பயங்கர சத்தத்தை மக்கள் கேட்டதாக தெரிவித்தனர். இதனால் பெங்களூருவாசிகள் பரபரப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'எனக்கு மட்டும் தான் இது போல மர்ம சத்தம் கேட்டதா?' என கருத்துக்களை பகிர இந்த சத்தத்தை தாங்களும் கேட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also read:
தந்தையிடம் ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கி மணமகள் செய்த செயலை பாருங்க
இதனிடையே மர்ம சத்தம் மற்றும் நில அதிர்வு கேட்தாக பொதுமக்கள் கூறியது குறித்து கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மையம் (KSNDMC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹெம்மிகேபுரா, கென்கரி, ஞானபாரதி, ராஜேஸ்வரி நகர், கஜாலிபுரா போன்ற பகுதிளில் இருந்து மர்ம சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. ஆனால் எங்களிடம் இருக்கும் தரவுகளின்படி ஆராய்ந்து பார்த்ததில் நில அதிர்வுக்கான எந்தவொரு தடயமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இது போல வானில் இருந்து மர்மமான பயங்கர சத்தம் கேட்பது இது முதல் முறை நடக்கும் நிகழ்வு கிடையாது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதத்திலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் இது போல பயங்கர சத்தம் கேட்டதாக பலரும் தெரிவித்தனர்.
Also read:
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... கட்டணத்தை குறைத்த தெற்கு ரயில்வே
கடந்த ஆண்டு மே 20ஆம் தேதியன்று மதியம் 1.20 மணிக்கு ஒரு மர்ம வெடிச் சத்தம் கேட்டதாக பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களின் அனுபவங்களை பகிர இது தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் சுகோய் போர் விமானம் கிளம்பிச் சென்றதால் ஏற்பட்ட சத்தம் அது என விளக்கம் தந்த நிலையில் அந்த பரபரப்பு ஓய்ந்தது.
பின்னர் இதே போல இந்த ஆண்டு மே மாதம் சி.வி.ராமன் நகர், அல்சூர், குந்தஹள்ளி, ஒயிட் பீல்ட், ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திடீரென இரண்டு முறை வானில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாக கூறி பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் வந்து தஞ்சம் அடைந்தனர். எனினும் சூப்பர் சோனிக் விமானம் சென்றதால் ஏற்பட்ட ஒலி அது என இந்திய விமானப்படையினர் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் பெங்களூரு நகரில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் மர்ம ஒலி, அந்நகர மக்களை பீதியில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.